உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏஐ டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் காஞ்சியில் விழிப்புணர்வு வீடியோ

ஏஐ டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் காஞ்சியில் விழிப்புணர்வு வீடியோ

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தன.இதன் தொடர்ச்சியாக, 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், தேர்தல் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தயாரித்து, மாவட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.ஓட்டு செலுத்த விரும்பாத மகனுக்கு, எளிமையாக ஓட்டளிக்கும் வழிமுறைகள் பற்றி தந்தை கூறுவதாக இந்த வீடியோ உள்ளது. விழிப்புணர்வு வீடியோக்கள் பலவும், வழக்கமான பாணியை பின்பற்றி வெளியாவதால், புதிய கோணத்தில் வீடியோ வெளியிட முடிவு செய்துள்ளனர்.அதன்படி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக பிரபலமானதாகும். இந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு வீடியோ, முதன்முதலாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இளைஞர்கள் மத்தியில், இந்த புதிய தொழில்நுட்ப வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை