உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓனர் கண்ணெதிரே பைக் திருட்டு

ஓனர் கண்ணெதிரே பைக் திருட்டு

சென்னை:சென்னை, திருவேற்காடு, மஹாசக்தி நகரைச் சேர்ந்தவர் வினோத், 24; தனியார் நிறுவன ஊழியர். இவர், வழக்கம் போல் இரண்டு நாட்களுக்கு முன், தன், 'பஜாஜ் பல்சர்-160' பைக்கை, வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 2:50 மணியளவில், ஆழ்ந்த துாக்கத்தில் இருந்த, வினோத் அவரது தந்தை ரவிக்குமார் ஆகியோர், சத்தம் கேட்டு வந்து பார்த்துள்ளனர்.அப்போது, மர்ம நபர் ஒருவர் அவரது பைக்கை எடுத்து செல்வது தெரிய வந்தது. வினோத், அவரது தந்தை மற்றும் தாய் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பினர்.கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், ஒரே பைக்கில் வந்து இருவர் நோட்டமிடுவதும், அதில் ஒருவர் பைக்கின் 'சைடு லாக்' உடைத்து, தள்ளி செல்வதும் பதிவாகி இருந்தது. பின், வாகனத்தின் உரிமையாளர்கள் வருவதை அறிந்து, இருவரும் வாகனங்களுடன் வேகமாக தப்பி செல்வதும் பதிவாகி இருந்தது. இது குறித்து, திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை