உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குண்டும் குழியுமான ஆமூர் - குன்னப்பட்டு சாலை

குண்டும் குழியுமான ஆமூர் - குன்னப்பட்டு சாலை

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆமூர்--குன்னப்பட்டு சாலை வழியாக, சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், மக்கள் அதில் சென்றுவர அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, மழை நேரத்தில், இச்சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. தற்பொழுது, பெய்த மழையின் காரணமாக, சேற்றில் நடக்கும் போது, அப்பகுதிவாசிகளுக்கு காலில் சேற்றுப்புண் ஏற்பட்டு, மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே, ஆமூர்-குன்னப்பட்டு சாலையை சீரமைக்க, துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை