உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்ஜினியர் வீட்டில் திருட்டு

இன்ஜினியர் வீட்டில் திருட்டு

புதுப்பட்டினம் : கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம், ஹாஜியார் நகரைச் சேர்ந்த புரணகுமார் மனைவி சுவேதா, 46. கல்பாக்கம் பாவினி அணுமின் நிறுவன சீனியர் இன்ஜினியர்.கடந்த 14ம் தேதி இரவு, வீட்டை பூட்டிக்கொண்டு, திருக்கழுக்குன்றம் கொத்திமங்கலம் சர்ச்சில், ஜெப வழிபாட்டிற்கு சென்றார். மறுநாள் காலை 8:00 மணிக்கு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன.கல்பாக்கம் போலீசில் அவர் புகார் அளித்தார். 27,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை