உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேட்பாளர்கள் சொத்து கோடிக்கணக்கில் எந்த தொகுதியில் இது அதிகம்?

வேட்பாளர்கள் சொத்து கோடிக்கணக்கில் எந்த தொகுதியில் இது அதிகம்?

சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில்உள்ள லோக்சபாதொகுதிகளுக்கானவேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி முதல், அந்தந்த தேர்தல்அலுவலகத்தில்நடக்கிறது.பிரதான கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும்அக்கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்கள், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, தேர்தல்பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தாராளமாக செலவு செய்வதற்கேற்றவேட்பாளர்களே,பெரும்பாலானஇடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெயரில் மட்டும்இருக்கும் சொத்து மதிப்பு, அவர்களதுவேட்புமனுவில்குறிப்பிடப்பட்டுஉள்ளது. அதில்,வேட்பாளர்களின்அசையும், அசையா சொத்து விபரங்கள்தெரிவிக்கப்பட்டுஉள்ளன.இதற்கு முந்தையதேர்தலிலும்,தற்போதைய தேர்தலிலும்சிலரின் சொத்துமதிப்பில் பெரியவித்தியாசம்உள்ளது.

காஞ்சி எம்.பி., சொத்து திடீர் சரிவு

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் செல்வம், 2014, 2019ல் போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கடந்த இரு தேர்தலைவிட இந்த தேர்தலில், அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளதுதெரியவந்துள்ளது. அவருக்கு 2014ல் அசையும் சொத்து 41 லட்சம் ரூபாய்; அசையா சொத்து 31 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. கடந்த 2019 தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட சொத்து கணக்கில், அசையும் சொத்து 76 லட்சம் ரூபாய்; அசையா சொத்து 4.2 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது, அவர் தாக்கல் செய்துள்ள சொத்துக்கணக்கின் படி, அசையும் சொத்து 1.67 கோடியாகவும், அசையா சொத்து 69 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. கடந்த தேர்தலை விட, தற்போது அவரது சொத்து மதிப்பு 50 சதவீதம் சரிந்துள்ளது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்