உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குழந்தை தொழிலாளர் முறை விழிப்புணர்வு உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் முறை விழிப்புணர்வு உறுதிமொழி

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, நேற்று விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில், செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தினையொட்டி, விழிப்புணர்வு உறுதிமொழியை, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், அரசு ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர்.இதுதொடர்பான கையெழுத்து இயக்கத்தினை, கலெக்டர் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை