உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோடை விடுமுறை எதிரொலி சிலம்பத்தில் சிறுவர்கள் ஆர்வம்

கோடை விடுமுறை எதிரொலி சிலம்பத்தில் சிறுவர்கள் ஆர்வம்

மாமல்லபுரம்:பாரம்பரிய தற்காப்பு கலைகளில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. சிலம்பம், மல்யுத்தம், களரி, வாள், கேடயம் போன்ற கலைகள், பழங்கால தற்காப்பு கலைகளாக சிறந்து விளங்கின.தற்போதைய காலகட்டத்தில், இக்கலைகள் படிப்படியாக வழக்கொழிந்து வருகின்றன. தற்கால இளைய தலைமுறையினர், பண்டைய வீரக் கலைகள் குறித்து அறியவும், பயிற்சி பெறவும், கலை ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயிற்சியும் அளிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள், சிறுவர்கள், சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில், தற்காப்பு கலை வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்