உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 3 மாதங்களில் 5 கட்டடங்களுக்கு சீல் சி.எம்.டி.ஏ., நடவடிக்கை

3 மாதங்களில் 5 கட்டடங்களுக்கு சீல் சி.எம்.டி.ஏ., நடவடிக்கை

சென்னை:சென்னை பெருநகரில், நடப்பு ஆண்டில் முதல் மூன்று மாதங்களில், விதிமீறல் செய்த ஐந்து கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டதாக, சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் குறித்த புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த புகார்கள் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்கள் நீதிமன்றங்களை நாடும் நிலைஏற்படுகிறது. நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடி உத்தரவு, முதல் அலுவலக தனிப்பிரிவு பரிந்துரை அடிப்படையில், விதிமீறல் கட்டடங் களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சீல் வைக்கின்றனர்.இந்நிலையில், 2023ல் ஒன்பது விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும், நடப்பு ஆண்டில், ஜன., - பிப்., மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களில், ஐந்து கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும், சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: நீதிமன்ற கிடுக்கிப்பிடி உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே, விதிமீறல் கட்டடங்கள் மீது சீல் வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.இதிலும், சீல் வைக்கப்பட்ட அனைத்து கட்டடங்களின் விபரங்களையும் முழுமையாக வெளியிட மறுக்கின்றனர்.கடந்த மூன்றுமாதங்களில் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கையில், ஒரு பகுதி தகவல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.இதில் முழுமையான விபரங்களை வெளியிட, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முன்வர வேண்டும். அப்போதுதான் வீடுவாங்குவோர் ஏமாறுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்