| ADDED : ஜூன் 04, 2024 05:28 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 550க்கும் மேற்பட்ட பணியாளர்கள், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில், ரேஷன் கடைகளுக்கு வெளிச்சந்தை விலையை விட, கூடுதல் விலைக்கு தரமற்ற, கட்டுப்பாடற்ற பொருட்கள் 25,000 ரூபாய்க்கு குறையாமல் வினியோகம் செய்யப்படுகிறது. அவற்றை விற்பனை செய்ய, கூட்டுறவுத்துறையால் நிர்பந்திக்கப்படுகிறது. கூட்டுறவு, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், ரேஷன் கடைகளை ஆய்வு செய்கின்றனர். இவர்களில், 25 சதவீதம் பேர், ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களிடம் லஞ்சம் பெறுவோராக உள்ளனர்.இவர்களுக்கு பணம் கொடுக்க இயலாது என மறுத்தால்,ஏதாவது காரணத்தைக் கூறி அபராதம் விதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமாகிறது.இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், கூட்டுறவு கடன் சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் என, 550க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.