உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சருகுகள் தீப்பற்றி தென்னைகள் நாசம்

சருகுகள் தீப்பற்றி தென்னைகள் நாசம்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில்,பூஞ்சேரி சந்திப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள தனியார் காலி நிலத்தையொட்டி தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, நேற்று பிற்பகல் 1:15 மணிக்கு, காலி இடத்தில் அடர்ந்திருந்த சருகுகளில் தீப்பற்றியது. பின், அருகில் இருந்த தென்னந்தோப்பிற்கும் தீ பரவியது.இதுகுறித்து, அப்பகுதியினர் மாமல்லபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இதில், 7 ஏக்கர் தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை