உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் ஆலை கட்டுமானத்திற்கு கான்கிரீட் பிளான்ட் அமைப்பு

குடிநீர் ஆலை கட்டுமானத்திற்கு கான்கிரீட் பிளான்ட் அமைப்பு

மாமல்லபுரம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், சென்னை குடிநீர் தேவைக்காக, கடல்நீரில் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலைகள் இயக்கப்படுகின்றன.மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சி, சூலேரிக்காடில், முதல் பிரிவாக, ஒரு நாளில் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை, 2013 முதல் இயங்குகிறது.அதே பிரிவின்கீழ், ஒரு நாளில், 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் மற்றொரு ஆலை அமைக்கப்பட்டு, கடந்த பிப்., முதல் இயங்குகிறது.அதே ஊராட்சி பேரூரில், இரண்டாம் பிரிவாக, ஒரு நாளில் 40 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை, 4,277 கோடி ரூபாய் மதிப்பில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட்டில், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக, புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்.ஆலைக்காக ஒதுக்கப்பட்ட 85 ஏக்கர் நிலத்தில் இருந்த சவுக்கு மரங்கள், தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சார்பில் வெட்டப்பட்டது.ஆலை ஒப்பந்த நிறுவனம், கட்டுமானத்திற்காக, சமனற்ற மணற்பரப்பை சமன் செய்தது. கட்டுமானப் பணிகளை துவக்க, தற்போது கான்கிரீட் கலவை தயாரிக்கும் 'பிளான்ட்' அமைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ