உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு கூடுவாஞ்சேரியில் துவக்கம்

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு கூடுவாஞ்சேரியில் துவக்கம்

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நெல்லிக்குப்பம் சாலை மற்றும் பேருந்து நிலையம் முதல் ஜி.எஸ்.டி., சாலை வரையில் உள்ள மூடப்பட்ட கழிவுநீர் கால்வாயில், சீராக கழிவுநீர் செல்லாமல் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசியது.இது குறித்து, பகுதிவாசிகள் அளித்த புகார் அடிப்படையில், நகராட்சி கமிஷனர் தாமோதரன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோர், கழிவுநீர் கால்வாயை சீரமைக்க உத்தரவிட்டனர்.அதன் படி, நகராட்சி துாய்மை பணியாளர்கள், கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, துார்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கழிவுநீர் கால்வாயில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றினர்.அதிகமான அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிதாலேயே கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கியதாகவும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் எனவும், சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ