உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காட்டன் சூதாட்டம் அ.தி.மு.க., புகார்

காட்டன் சூதாட்டம் அ.தி.மு.க., புகார்

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில் அமோகமாக நடந்து வரும் காட்டன் சூதாட்டத்தை தடுக்க, அ.தி.மு.க., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருக்கழுக்குன்றம் அ.தி.மு.க., செயலர் தினேஷ்குமார் கூறியதாவது:திருக்கழுக்குன்றத்தில், காட்டன் சூதாட்டம் மற்றும் கேரள மாநில மூன்று நம்பர் லாட்டரி தலைவிரித்தாடுகிறது. இந்த சட்டவிரோத தொழில்களை, இதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், செங்கல்பட்டைச் சேர்ந்த ஒருவர், இங்கு செய்கின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த 12 பேர் புரோக்கர்களாகவும் உள்ளனர்.இக்கும்பல், கூலித் தொழிலாளர்களிடம் தினமும் சட்டவிரோதமாக பணத்தை சுரண்டுகிறது. ஏழைகளின் பொருளாதாரம்அழிகிறது.இக்கும்பலை ஒடுக்கி, ஏழைத் தொழிலாளர்களை போலீசார் காப்பாற்ற வேண்டும். இது குறித்து, போலீசாரிடம் புகாரும் அளித்துள்ளேன்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ