உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முடிச்சூர் சாலையில் ஆக்கிரமிப்பு பாரபட்சமின்றி அகற்ற கோரிக்கை

முடிச்சூர் சாலையில் ஆக்கிரமிப்பு பாரபட்சமின்றி அகற்ற கோரிக்கை

தாம்பரம்:தாம்பரம் - முடிச்சூர் சாலையில் அதிகரித்துள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை, எவ்வித பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சமீபத்தில் ஜி.எஸ்.டி., சாலையில், போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. இது, பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றது.இதேபோன்று, தாம் பரம் - முடிச்சூர் சாலையிலும், சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இச்சாலை, ஜி.எஸ்.டி., சாலை - வாலாஜாபாத் சாலைகளை இணைப் பதால், 24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கும்.ஆக்கிரமிப்புகளால்,அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையில், கடைக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக, நெடுஞ்சாலைத்துறையினர் மழைநீர் கால்வாயை வளைத்து வளைத்து கட்டியுள்ளனர். இதுவும்நெரிசலுக்கு ஒரு காரணம்.அதனால், நாள்தோறும் 'பீக் ஹவர்' நேரத்தில், வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன. விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.இப்படியே விட்டால்,மழைநீர் கால்வாய்எங்கிருக்கிறது என்பது தெரியாத அளவிற்கு, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விடும்.எனவே, ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல, எவ்வித பாரபட்சமின்றி தாம்பரம் - முடிச்சூர் சாலையில் அதிகரித்து வரும் சாலையோர ஆக்கிரமிப்புகளையும், உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை