உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிரணவமலையில் மின் மோட்டார் பழுது தண்ணீருடன் படியேறும் பக்தர்கள்

பிரணவமலையில் மின் மோட்டார் பழுது தண்ணீருடன் படியேறும் பக்தர்கள்

திருப்போரூர்:திருப்போரூர் பிரணவமலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அடிவாரத்தில், பொது கிணறு உள்ளது.இந்த கிணற்றிலிருந்து மேற்கண்ட கோவிலுக்கும், அதன் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சத்துணவு கூடத்திற்கும், மின் மோட்டார் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த ஒரு வாரமாக, கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டி பக்தர்கள், பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். எனினும், இன்னும் சீரமைக்கப்படவில்லை.இதனால், கோவிலில் தண்ணீர் இல்லாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். நேற்று பிரதோஷம் வழிபாடு இருந்த நிலையில், சுவாமி அபிஷேகம் செய்வதற்கு, பக்தர்கள் 10க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன் வாங்கி, மலையேறி துாக்கிச்சென்றனர். கடந்த கிருத்திகை வழிபாட்டின்போதும், தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர்.அதேபோல், பள்ளி சத்துணவு கூடத்திலும் தண்ணீர் இல்லாததால், சமையல் பணியாளர்கள் குழந்தைகளுக்கு உணவு சமைக்க அவதிப்படுகின்றனர். பள்ளி வளாக நுழைவாயில் பகுதியில் உள்ள தொட்டியில், பேரூராட்சி குழாய் வாயிலாக நிரப்பப்படும் தண்ணீரை எடுத்து வந்து சமையல் செய்கின்றனர்.எனவே, மேற்கண்ட கிணற்றின் மின் மோட்டாரை விரைவில் சரிசெய்து, கோவில் மற்றும் பள்ளிக்கு குடிநீர் வழங்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, அப்பகுதி வாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி