| ADDED : ஆக 03, 2024 10:54 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட, ஆறாவது வார்டு, காந்திநகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களின் தேவைக்காக, மதுராந்தகம் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 2007 -- 08ம் ஆண்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.இதனால், அப்பகுதிவாசிகள் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி, வர்ண பூச்சு பொலிவின்றி, பாழடைந்து வருகிறது.இதனால், மதுராந்தகம், சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால், பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது.எனவே, பயன்பாடின்றி பாழடைந்துள்ள சமுதாய நலக்கூடத்தை, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.