உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாவட்ட ஹாக்கி சாம்பியன்ஷிப் இந்தியன் வங்கி அணி வெற்றி

மாவட்ட ஹாக்கி சாம்பியன்ஷிப் இந்தியன் வங்கி அணி வெற்றி

சென்னை : -திருவள்ளூர் மாவட்ட ஹாக்கி அமைப்பு சார்பில், மாவட்ட ஹாக்கி பிரிமீயர் லீக் போட்டிகள், நேற்று முன்தினம் துவங்கின.இதில், தயாந்த் வீரன், எஸ்.எம்.நகர், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு உட்பட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதிக வெற்றியை பெறும் நான்கு அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.அதன்படி சென்னை, போரூரில் உள்ள தனியார் கல்லுாரி மைதானத்தில், நேற்று காலை நடந்த நான்காவது 'லீக்' போட்டியில், இந்தியன் வங்கி அணியை எதிர்த்து, மாஸ்கோ மேஜிக் அணி களமிறங்கியது.ஆட்டத்தின் 20, 23, 33, 42, 43 ஆகிய நிமிடங்களில் இந்தியன் வங்கி கோல் அடித்தது. பதிலுக்கு 29 மற்றும் 54 நிமிடங்களில் மாஸ்கோ மேஜிக் கோல் அடித்தாலும், தோல்வியை தழுவியது.

அணிகள் கோல்

இந்தியன் வங்கி 5மாஸ்கோ மேஜிக் 2-வருமான வரித்துறை 3பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ் 1


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை