| ADDED : ஜூலை 31, 2024 04:27 AM
செய்யூர் : அச்சிறுபாக்கம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட கடப்பாக்கம் ஜி.வி.ஆர்., மெட்ரிக்குலேஷன்பள்ளியில், பாரதியார் பிறந்த நாள் மற்றும்குடியரசு தினத்தைமுன்னிட்டு, பள்ளிமாணவர்களுக்குவட்டார அளவிலான வாலிபால் போட்டிநடந்தது.இதில், அரசு, தனியார் என, 27 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில், யு - 14 வயது பிரிவு இறுதிப்போட்டியில், கடப்பாக்கம் அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கடப்பாக்கம் கே.வி.எஸ்.,மெட்ரிக்குலேஷன் பள்ளிமாணவர்களைவீழ்த்தினர்.யு - 17 வயது பிரிவு இறுதிப்போட்டியில் போந்துார் அரசுஉயர்நிலைப் பள்ளிமாணவர்கள், கடப்பாக்கம் அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளி மாணவர்களைவீழ்த்தினர்.யு - 19 வயது பிரிவுஇறுதிப் போட்டியில், கடப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களைவீழ்த்தி வெற்றிபெற்றனர்.இதில் வெற்றி பெற்ற மாணவர்கள், அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.