உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாவட்ட வாலிபால் போட்டி அரசு பள்ளி தொடர் வெற்றி

மாவட்ட வாலிபால் போட்டி அரசு பள்ளி தொடர் வெற்றி

சென்னை : சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும்சான் அகாடமி குரூப்ஆப் ஸ்கூல் இணைந்து, 6வது சென்னை சிட்டி பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் 29 அணிகளும், மாணவியரில் 19 அணிகளும்பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம் மாலை நடந்த மாணவியருக்கான போட்டியில், எம்.எச்., சாலை சென்னை மாநகராட்சி அரசு பள்ளி அணி, 2 - 0 என்றசெட் கணக்கில் டாக்டர் பி.எம்.எஸ்., அணியையும், மற்றொரு ஆட்டத்தில், 2 - 0 என்ற கணக்கில் செயின்ட் பிரான்ஸ்சேவியர் அணியையும் தோற்கடித்தன.நேற்று காலை நடந்த மாணவருக்கான போட்டி யில், டான்பாஸ்கோ அணி, 2 - 0 என்ற கணக்கில், மான்போர்ட் பள்ளியையும், செயின்ட் பீட்ஸ் பள்ளி, 2 - 0 என்ற கணக்கில் பி.ஏ.கே., பழனிசாமி பள்ளியையும் வீழ்த்தின. மற்றொரு போட்டியில் ஜேப்பியார் அணி 2 - 0 என்ற செட் கணக்கில், செயின்ட் பீட்டர்ஸ் அணியை தோற்கடித்தது.மாணவியருக்கான ஆட்டத்தில், எம்.எச்., சாலை சென்னை மாநகராட்சி பள்ளி, 2 - 0 என்ற கணக்கில் வேலம்மாள் பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது.வித்யோதயா அணி 2 - 0 என்ற கணக்கில் பிரசிடென்சி பள்ளியை தோற்கடித்தது. போட்டிகள் இன்று மாலை வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை