உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஈசூர் - மதுராந்தகம் டவுன் பஸ் விடுமுறை நாட்களிலும் இயங்குமா?

ஈசூர் - மதுராந்தகம் டவுன் பஸ் விடுமுறை நாட்களிலும் இயங்குமா?

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த ஈசூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில், 5,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.தினசரி நுாற்றுக்கணக்கானோர் வேலைக்காகவும், பள்ளி மற்றும் கல்லுாரிக்குசெல்லும் மாணவ - மாணவியரும் சித்தாமூர்,மதுராந்தகம் போன்ற பகுதி களுக்கு செல்கின்றனர்.அதனால், அப்பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக, 30 ஆண்டுகளாக டி5 என்ற தடம் எண் கொண்ட அரசு பேருந்து, ஈசூரில் இருந்து சிறுமயிலுார், கயப் பாக்கம், பெருக்கரணை, பேரம்பாக்கம், சித்தாமூர் வழியாக மதுராந்தகம் வரை இயக்கப்படுகிறது.வார நாட்களில் சரியாக இயக்கப்படும் இந்த பேருந்து, வார விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் இயக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், தனியார் நிறுவன வேலை மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பகுதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி, தினசரி டவுன் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள்எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி