மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
செங்கல்பட்டு : சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிப்புண்ணியம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவலு, 30. நேற்று முன்தினம், செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில், தன் நண்பர் விமல்ராஜ் உடன் மது அருந்தி உள்ளார்.மது போதையில் கேசவலு மயங்கி உள்ளார். போதை தெளிந்து பார்த்த போது, கழுத்தில் அணிந்திருந்த, 3 சவரன் தங்க நகை திருடு போயிருந்தது.அதோடு, உடன் குடித்த விமல்ராஜ் மாயமாகி இருந்தார். இது குறித்து, கேசவலு செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து, செட்டிப்புண்ணியம் பகுதியை சேர்ந்த விமல்ராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு, அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.விமல்ராஜ் மீது, ஏற்கனவே பாலுார் காவல் நிலையத்தில் வழிப்பறி, மொபைல் போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1 hour(s) ago
1 hour(s) ago