உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது குடிசை வீடு தீப்பற்றி மூதாட்டி உயிரிழப்பு

பொது குடிசை வீடு தீப்பற்றி மூதாட்டி உயிரிழப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, செங்குந்தர்பேட்டை அருளாலீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாதவி, 74.இவர், தன் மகனுடன், தென்னங்கீற்றால் வேயப்பட்ட வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், தென்னங்கீற்றால் வேயப்பட்ட இவரது வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், மதுராந்தகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இருப்பினும், வீடு முழுதுமாக தீக்கிரையானது.வீட்டின் உள்ளே இருந்த மூதாட்டி மாதவி, தீயில் கருகி உயிரிழந்தார்.தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.வீட்டில் தீப்பற்றியதற்கு மின்கசிவு காரணமா அல்லது சமையல் செய்யும் போது தீ விபத்து ஏற்பட்டதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !