உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடமலைப்புத்துாரில் மின் கம்பம் சேதம்

கடமலைப்புத்துாரில் மின் கம்பம் சேதம்

அச்சிறுபாக்கம், கடமலைப்புத்துார் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில், வீட்டிற்கு தேவையான மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இக்கம்பத்தில், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இந்த மின்கம்பம் சேதமடைந்து உள்ளது.இது குறித்து, அப்பகுதி குடியிருப்புவாசி கு.முனுசாமி, 65, என்பவர் கூறியதாவது:பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில், இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து, கம்பம் முறிந்து விழும் நிலையில் உள்ளது.இதுகுறித்து, மின்வாரியத் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கம்பம் அமைந்துள்ள பகுதியில், பனை ஓலையால் வேயப்பட்ட குடிசை வீடு உள்ளது. காற்றடிக்கும் நேரங்களில், மின் ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்படுகிறது.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை