உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பகிங்ஹாம் கால்வாய் பாலத்தில் வசீகரிக்கும் புற்களின் பசுமை

பகிங்ஹாம் கால்வாய் பாலத்தில் வசீகரிக்கும் புற்களின் பசுமை

மாமல்லபுரம்:மாமல்லபுரம் பகுதி பகிங்ஹாம் கால்வாயில், திருக்கழுக்குன்றம் சாலை குறுக்கிடுகிறது. கால்வாயை கடந்துசெல்ல, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பாலங்களுக்கு மாற்றாக, புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு, கடந்த 2019 முதல், வாகனங்கள் கடந்து செல்கின்றன.பாலங்களின் இருபுற பக்கவாட்டு பகுதியை பராமரிக்காமல், முட்புதர் சூழ்ந்தது. தேசிய, சர்வதேச முக்கிய நிகழ்வுகள், இப்பகுதியில் நடக்கின்றன. இந்திய, சர்வதேச பிரமுகர்கள் வருகின்றனர்.அப்போது முட்புதரை அகற்றி பராமரிப்பர். மீண்டும் முட்புதர் சூழ்ந்து, பாலத்தில் நீண்டு, இருசக்கர வாகனத்தில் செல்லும் பயணியருக்கு இடையூறாகவும், அவலத்துடனும் காணப்படும்.தற்போது முக்கிய நிகழ்வுகள் அதிகரித்து, பிரமுகர்கள் வருகின்றனர். பிரமுகர்களை, சிற்ப பகுதிகளுக்கு, புறவழியில் அழைத்துச் செல்லும் நிலையில், பாலங்கள் பக்கவாட்டில் உள்ள புதர்களை கண்டு அருவருத்தனர். எனவே, பாலத்தின் பக்கவாட்டு தடுப்பில், மண் அரிப்பு ஏற்படாமல் தடுத்து, சுற்றுலா சிறப்பு கருதி பொலிவுடன் பராமரிக்க, நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்தது. சில மாதங்களுக்கு முன், பாலங்களில் சூழ்ந்த முட்புதர் அகற்றப்பட்டது. பாலத்தின் மேற்கு நுழைவு பகுதியில், மண் சரிவை தடுக்க, குறிப்பிட்ட நீளத்திற்கு தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.பாலத்தின் இருபுற பக்கவாட்டு பகுதியில், ஏரி மண் நிரப்பி, புற்கள் நட்டு நீரூற்றி பராமரிக்கப்பட்டது. தற்போது, அவை வளர்ந்து, பசுமை பொலிவு பெற்று காண்போரை வசீகரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை