மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
4 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
4 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
4 hour(s) ago
மாமல்லபுரம்:மாமல்லபுரம் சுற்றுலா வரும் வாகனங்களுக்கு, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதனால், ஆண்டுதோறும், ஏப்., 1ம் தேதி முதல், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்காக பொது ஏலம் நடத்தி, ஏலம் பெறும் தனியாரிடம் அதன் உரிமம் அளிக்கப்படும்.குத்தகை ஏலதாரரின் ஊழியர்கள், கோவளம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி, நுழைவுக் கட்டணம் வசூலிப்பர். லோக்சபா தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் 16ம் தேதி முதல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கட்டண உரிமத்திற்கான பொது ஏலம் தவிர்க்கப்பட்டது. கடந்த மார்ச் 31ம் தேதி, தனியார் குத்தகை உரிம காலம் முடிவடைந்த நிலையில், ஏப்., 1ம் தேதி முதல், பேரூராட்சி நிர்வாகமே கட்டணம் வசூலித்து வருகிறது.ஆனால், நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கென தனியாக ஊழியர்கள் இல்லாததால், பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களே, கட்டணம் வசூல் பணியிலும் ஈடுபடுகின்றனர்.அதனால், அவர்களின் இயல்பான பேரூராட்சி பணிகள் முடங்குகின்றன. சில ஊழியர்கள், கட்டணத்திற்கான ரசீது அளிப்பதில்லை என்ற புகார்களும் வந்த வண்ணம் உள்ளன.வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில், வாகனங்கள் அதிகளவில் குவிந்தும், நுழைவுக் கட்டணமாக குறைவான தொகையே வசூலானதாக, அந்த ஊழியர்கள் நிர்வாகத்திடம் கணக்கு காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தேர்தல் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு, ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில், தற்போது வரை நுழைவுக்கட்டணம் வசூலிக்க பொது ஏலம் நடத்தாமல், பேரூராட்சி நிர்வாகமே வசூலித்து வருகிறது. அரசு அனுமதி இருந்தால் மட்டுமே, பேரூராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலிக்கலாம். ஆனால், நடப்பாண்டுக்கு அரசு அனுமதி இன்றியே, கட்டணம் வசூலிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்க, ஒவ்வொரு ஆண்டும் அரசிடம் அனுமதி பெற வேண்டும். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, அனுமதி பெறுவது தாமதமானது. அரசு அனுமதி பெற்று, பொது ஏலம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago