செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன.இவற்றில், சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்த வரும் பயணியர், தாம்பரம், சென்னை, மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.அதேபோல, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, செங்கல்பட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.இந்த ரயில் நிலையத்தில்,எட்டு நடைமேடைகள்உள்ளன. இதில், முதலாவதுநடைமேடையில், 2022ம் ஆண்டு 'எஸ்கலேட்டர்' அமைக்கப்பட்டது.ஆனால், சில மாதங்களாக, இந்த எஸ்கலேட்டர் எனும் நகரும் படிக்கட்டு, பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளது. இதனால், பயணியர் படிக்கட்டுகளை பயன் படுத்தி சிரமம் அடைந்துவருகின்றனர்.இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:தினமும் இந்த ரயில் நிலையத்தை, பல்லாயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். புதிதாக அமைக்கப்பட்டு சில ஆண்டுகளே ஆனஎஸ்கலேட்டர், முறையாக பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்து உள்ளது.மேலும், முதலாவது நடைமேடையில் மட்டுமே, எஸ்கலேட்டர் உள்ளது. பயணியர் அதிகம் வந்து செல்லும், மூன்று மற்றும் நான்காவது நடைமேடைகளில் புதிதாக எஸ்கலேட்டர் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம்.எனவே, பயணியரின் சிரமத்தை உணர்ந்து, எஸ்கலேட்டரை பழுது நீக்கவும், கூடுதலாக எஸ்கலேட்டர்கள் அமைக்கவும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.