உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஹார்டுவேர்ஸ் கடையில் தீ:

ஹார்டுவேர்ஸ் கடையில் தீ:

முடிச்சூர்:தாம்பரம் - முடிச்சூர்சாலை, பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, ராஜேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான, 'கோகுல் ஹார்டுவேர்ஸ்' கடை உள்ளது.நேற்று மதியம்,இந்த கடையின் முதல் தளத்தில் இருந்து, திடீரெனபுகை வெளியேறியது. இதை பார்த்து கவனித்த கடை ஊழியர்கள்,சுதாரித்து வெளியேறினர்.சற்று நேரத்தில் தீ பிடித்து எரிந்தது. கடையில்பெயின்ட் டப்பா,பைப் என பிளாஸ்டிக் பொருட்களில் மளமளவென தீ பரவியது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.தீயில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.இச்சம்பவத்தால்,அச்சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. பீர்க்கன்காரணை போலீசார், தீ விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை