உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவில் ஊழியர்களிடம் ஹிந்து முன்னணி வாக்குவாதம்

கோவில் ஊழியர்களிடம் ஹிந்து முன்னணி வாக்குவாதம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் குளக்கரையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை கோவில் நிர்வாகம் அகற்றி வருகிறது. நேற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.அப்போது கோவில் அருகே உள்ள கடைகளில் கற்பூரம் விற்கக் கூடாது என, கோவில் ஊழியர் கூறியதாகக் கூறி, அங்கிருந்த ஹிந்து முன்னணியைச் சேர்ந்த சிலர், கோவில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் தரப்பில் அரசு பணியை தடுத்து, கோவில் ஊழியரை தாக்க முயன்றதாகக் கூறி, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மீது திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.அதேபோல், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில், கோவில் ஊழியர் தாக்க முயன்றதாகக் கூறியும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு புகாரை பெற்ற போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், ஹிந்து முன்னணி அமைப்பினர் 20க்கும் மேற்பட்டோர், கோவில் அலுவலகம் முன் குவிந்து, நிர்வாகியை தாக்க முயன்ற ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,அங்கு சிறிது நேரம்பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை