| ADDED : ஜூலை 28, 2024 06:53 AM
மேல்மருவத்துார : மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கேரம், செஸ் ஆகியவிளையாட்டு போட்டிகளுக்கான உள்விளையாட்டு அரங்கம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடம்புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரி அறங்காவலர் அன்பழகன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. மேல்மருவத்துார் ஊராட்சி துணை தலைவர் அகத்தியன் முன்னிலை வகித்தார்.இதில் பங்கேற்ற கலெக்டர் அருண்ராஜ், உள்விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். தேசிய கிரிக்கெட் தேர்வாளர் ஸ்ரீதரன்சாரதி, டி.என்.பி.எல்., தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து, ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளார் 85வது பிறந்தநாளை ஒட்டி, ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், மாநிலஅளவிலான கலிங்கா விளையாட்டு போட்டி, கடந்த 23ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம்நிறைவடைந்தது. இதில், அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்களை, கல்லுாரி அறங்காவலர் அன்பழகன் வழங்கினார்.