உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு துவக்கம்

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு துவக்கம்

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கு உட்பட்டஅனைத்து பகுதிகளிலும்,கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்தேக்கம் அடைந்து, கழிவுநீர் சீராக செல்லாமல் துர்நாற்றம் வீசியது.இது குறித்து, பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், நகராட்சி தலைவர் கார்த்திக்,நகராட்சி கமிஷனர் தாமோதரன் ஆகியோர் உத்தரவின்படி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் துார்வாரி சீரமைக்கும் பணிதுவங்கியது.நேற்று, நந்திவரம்- காமராஜபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தெருவில், கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டது.அப்போது, கால்வாயில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றி,கழிவுநீர் சீராக செல்லும் வகையில், நகராட்சி துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை