உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை ஸ்தலசயனர் கோவிலுக்கு பெயர் பலகை அமைக்க வலியுறுத்தல்

மாமல்லை ஸ்தலசயனர் கோவிலுக்கு பெயர் பலகை அமைக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்திபெற்றது. வைணவ 108 திவ்விய தேசங்களில், 63வதாக விளங்குகிறது.ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பன்னிரு ஆழ்வார்கள் உள்ளிட்ட சுவாமியர் வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.இக்கோவில் மஹா கும்பாபிஷேகம், கடந்த 1998ல் நடத்தி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என, அடுத்தடுத்து நடத்தாமல் தடைபட்டது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துமாறு, பக்தர்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, பழமை மாறாத வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொண்டு புனரமைக்கப்பட்டது. அதன் மஹா கும்பாபிஷேகமும், கடந்த பிப்., 1ம் தேதி நடத்தப்பட்டது.தற்போது பக்தர்களின் வருகை அதிகரிக்கும் நிலையில், கோவில் நுழைவாயிலில், தற்போது வரை கோவில் பெயர்ப்பலகை அமைக்கப்படவில்லை.வெளியூர் பக்தர்கள், சுற்றுலா பயணியர், பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள கோவிலை பற்றி அறிய இயலவில்லை. பிறரிடம் விசாரித்தே, கோவிலுக்கு செல்கின்றனர்.அனைவரும் கோவில் குறித்து அறியும் வகையில், நுழைவாயிலில், சுவாமியர் படத்துடன் பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என, ஆன்மிக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை