மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
6 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
6 hour(s) ago
மாமல்லபுரம்:தமிழகத்தில் முதல் முறையாக, சர்வதேச காற்றாடி திருவிழா, மாமல்லபுரத்தில், 'குளோபல் மீடியா பாக்ஸ்' என்ற தனியார் நிறுவனம் சார்பில், கடந்த 2022ல் நடத்தப்பட்டது.மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான கடலோர பகுதியில் நடத்தப்பட்டது. இவ்விழா, கடந்த ஆண்டும், அதே பகுதியில் நடத்தப்பட்டது.இந்தியாவின் தமிழகம்,புதுடில்லி, தெலுங்கானா, ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து, காற்றாடி பறக்கவிடும் கலைஞர்கள்பங்கேற்றனர்.விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள், கார்ட்டூன் கதாபாத்திர உருவகங்கள் உள்ளிட்ட வடிவங்களில், பல வண்ண காற்றாடிகளை, கடற்கரை பகுதி திடலில் பறக்கவிட்டு, பார்வையாளர்ளைவசீகரித்தது.மூன்றாம் ஆண்டு நிகழ்வாக, திருவிடந்தை கடற்கரை பகுதியில், ஆக., 15ம் தேதி முதல், 18ம் தேதி வரை நடத்தப் படுகிறது. பொருட்கள் விற்பனையகங்கள், உணவு, குழந்தைகள் விளையாட்டு ஆகிய கொண்டாட்ட நிகழ்வுகளுடன் நடத்த இருப்பதாக, அந்நிறுவனம் இணையதளத்தில் அறிவித்துள்ளது.நுழைவுக் கட்டணம், முன்பதிவு உள்ளிட்ட விபரங்களுக்கு, www.tnikf.comஎன்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
6 hour(s) ago
6 hour(s) ago