உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விழிப்புணர்வு அரசு பள்ளியில் சர்வதேச யோகா தினம்

விழிப்புணர்வு அரசு பள்ளியில் சர்வதேச யோகா தினம்

திருப்போரூர்:திருப்போரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில், தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் சார்பில்,சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நடந்தன.இதில், பள்ளி மாணவ - மாணவியருக்குயோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், அதன் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், மாணவர்களுக்கு யோகாசனம் செய்து காண்பித்து, அது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.இந்நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி