உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை கடற்கரை கோவிலில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

மாமல்லை கடற்கரை கோவிலில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

மாமல்லபுரம்:இந்தியாவின் பாரம்பரிய யோகா கலையை சிறப்பிக்கும் விதமாக, பிரதமர் மோடி, ஜூன் 21ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக, கடந்த 2015ல் அறிவித்தார்.அதைத்தொடர்ந்து, இத்தினம் உலக நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்நாளை சுற்றுலா பகுதியான மாமல்லபுரத்தில், முக்கிய மத்திய அரசுத்துறைகள் சார்பில், ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நிலையில், 10ம் ஆண்டு தினமான இன்று, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் வளாகத்தில், தொல்லியல் துறை - சென்னை வட்டம் சார்பிலும், ஐந்து ரதங்கள் சிற்ப வளாகத்தில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை - கல்பாக்கம் அலகு சார்பிலும், காலை 6:30 மணிக்கு யோகா நிகழ்த்தப்படுகிறது.இந்நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ