உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜீவன் ரக் ஷா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஜீவன் ரக் ஷா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், ஜீவன் ரக் ஷா பதக்க விருதுகள் பெற, தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:இந்திய அரசின் சார்பாக, பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்குகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு, மனித உயிர்களை மீட்பவர்களுக்கு, ஜீவன் ரக் ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது பெற, http://awards.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக, வரும் 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் மொபைல் எண் 74017 03461ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி