மேலும் செய்திகள்
பார்வை தந்த சேவை
03-Feb-2025
கல்பாக்கம், சென்னை அணுமின் நிலைய, சமூக பொறுப்பு திட்ட, இலவச கண் அறுவை சிகிச்சை முகாமிற்கு, சுற்றுபுற பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.இந்திய அணுமின் கழகத்தின்கீழ், கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. இந்நிலைய நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், சுற்றுபுற பகுதிகளில் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகள் ஆகியவற்றுக்கு கட்டடம் கட்டுகிறது.குடிநீர் வசதிகளைமேம்படுத்துகிறது.திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையுடன் இணைந்து, கல்பாக்கத்தில் ஆண்டுதோறும், பிப்., மாதம், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துகிறது. ஐந்து நாட்களுக்கு மேல் சிறப்பு முகாம் நடத்தி, சுற்றுப்புற பகுதியினர் கண்களை பரிசோதிப்பர். கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு, அங்கேயே நடமாடும் அறுவை அரங்கில், இலவச அறுவை சிகிச்சை அளிப்பர்.பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, இலவச மூக்கு கண்ணாடி வழங்குவர். தற்போது பிப்., மாதம் முடிவடைய உள்ள நிலையில், இம்முகாம் நடத்த சுற்றுப்புற பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, நிலைய சமூக பொறுப்பு குழுவினர் கூறும்போது,'மார்ச் மாதம் இறுதியில், 10 நாட்கள் முகாம் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. முகாம் நாட்கள் குறித்து, விரைவில் அறிவிக்கப்படும்,' என்றனர்.
03-Feb-2025