| ADDED : ஜூலை 17, 2024 01:05 AM
கூடுவாஞ்சேரி,நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில் மூன்று நுாலகங்கள் உள்ளன. நந்திவரம் மற்றும் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் தலா ஒரு ஊர்ப்புற நுாலகமும், கூடுவாஞ்சேரி காந்தி தெருவில் கிளை நுாலகமும் செயல்பட்டு வருகின்றன.இந்த நுாலகங்கள், காலை 8:30 மணி முதல், 11:30 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணிவரையும் திறந்திருக்கும்.இந்த நுாலகங்களில் சுற்றுவட்டார பகுதிவாசிகள், மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பட்டதாரிகள், தினசரி நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களை படித்துவந்தனர்.ஆனால், தற்போது நாளிதழ்கள் வருவதில்லை என, வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து,அப்பகுதி வாசகர்கூறியதாவது:கூடுவாஞ்சேரியில் உள்ள மூன்று நுாலகங்களிலும், காலை, மாலை நாளிதழ்கள் வருவதில்லை. சில நாட்களுக்கு முன் வரை, நாளிதழ்கள் சரியாக வந்து கொண்டிருந்தன. ஆனால், தற்போது வழக்கம் போல் வரும் தினசரி நாளிதழ்கள் வருவதில்லை.எனவே, முன்னணி நாளிதழ்கள், வார இதழ்களை வழக்கம் போல் நுாலகங்களுக்கு வினியோகம் செய்ய, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.