மேலும் செய்திகள்
அரசு பள்ளி பாழடைந்த கட்டடம் இடித்து அகற்ற வேண்டுகோள்
2 hour(s) ago
அரசு பள்ளிகளில் பராமரிப்பு ரூ.6.50 கோடி ஒதுக்கீடு
2 hour(s) ago
ரேஷன் கடைகள் கட்ட ரூ.43 லட்சம்
2 hour(s) ago
கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி அடுத்த குமிழி கிராமத்தில், பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது.மிகவும் பழமைவாய்ந்த இக்கோவிலில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, முதல் கால யாக பூஜையுடன், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு வேள்விகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.அதைத் தொடர்ந்து, நேற்று காலை, மங்கள வாத்தியங்களுடன் பம்பை, உடுக்கை மேளத்துடன், பக்தர்கள் புடைசூழ, யாகசாலையில் இருந்து புனித நீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் எடுத்துச் சென்றனர்.கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கும், கோவிலுக்குள் உள்ள மூலவ மூர்த்தி மற்றும் அம்பாளுக்கும், புனித நீரை தெளித்து, மஹா கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று, கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை, குமிழி கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago