| ADDED : ஜூன் 24, 2024 06:06 AM
மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயந்திரகுமார், 19. அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.ஜெயந்திரகுமார், நேற்று மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது நண்பரை காண சென்றார்.அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்டில் சென்ற போது, அடையாளம் தெரியாத இருவர், ஜெயந்திரகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், ஜெயந்திரகுமார் இது குறித்து மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.