உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்திவரம் குளத்தில் தவறி விழுந்த முதியவர் பலி

நந்திவரம் குளத்தில் தவறி விழுந்த முதியவர் பலி

கூடுவாஞ்சேரி:நந்திவரத்தில் உள்ள பெரியகுளம், சில மாதங்களுக்கு முன் பராமரிக்கப்பட்டு, சிறுவர் பூங்கா மற்றும் நடைபாதை அமைத்து மேம்படுத்தப்பட்டது.இங்கு, நந்திவரம் காலனியை சேர்ந்த பெருமாள், 65, என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை பணியில் இருந்த அவர், குளத்தில் தவறி விழுந்துள்ளார்.சேற்றில் தத்தளித்த அவரைக் கண்ட அப்பகுதிவாசிகள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த மறைமலை நகர் தீயணைப்பு துறை வீரர்கள், சேற்றில் சிக்கியிருந்த பெருமாளை மீட்டு, குளத்திற்கு வெளியே கொண்டு வந்தனர்.ஆனால், பெருமாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிந்தது. கூடுவாஞ்சேரி போலீசார் பெருமாள் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ