மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
5 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
5 hour(s) ago
கூடுவாஞ்சேரி:ஊரப்பாக்கம் ஊராட்சி வள்ளியம்மை தெருவில், அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, கிளை தபால் அலுவலகம் செயல்படுகிறது.அதிக அளவில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் உள்ள இந்த தெருக்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், தெரு முழுதும் வழிந்தோடி, சாலையில் தேங்கி நிற்கிறது.அதனால், இப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இந்த சாலை பயன்படுத்தும் குடியிருப்புவாசிகள், கொசு தொல்லை, துர்நாற்றம் போன்றவற்றால் அவதி அடைந்து வருகின்றனர்.இது குறித்து, ஊரப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, இப்பகுதியில் கழிவு நீர் கால்வாயை சீரமைத்து, தெருவில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 hour(s) ago
5 hour(s) ago