உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறிய அளவிலான ஜவுளி பூங்கா தொழில் முனைவோருக்கு வாய்ப்பு

சிறிய அளவிலான ஜவுளி பூங்கா தொழில் முனைவோருக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு:சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க, தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கூட்டம், வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோருக்கு, 2.50 கோடி ரூபாய் வரை, தமிழக அரசால் நிதி உதவி வழங்கப்படும்.இதன்படி, மூன்று தொழில்கூடங்களுடன், குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். நிலம், உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக்கூடம், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள் போன்றவை மட்டுமே, அரசு மானியத்தை பெற தகுதியான முதலீடாக கருதப்படும்.இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த வாய்ப்பை, ஜவுளித் தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.செங்கல்பட்டு மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர், வரும் 18ம் தேதி, மாலை 5:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.மேலும் விபரங்களுக்கு, மண்டல துணை இயக்குனர், துணி நுால் துறையின் சேலம் அலுவலகத்தையும், gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை