உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க தடை மீறுவோருக்கு அபராதம் விதிக்க உத்தரவு

பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க தடை மீறுவோருக்கு அபராதம் விதிக்க உத்தரவு

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. இங்கு வணிக நிறுவனங்கள், சில்லறை வணிகர்கள், வியாபாரிகள் அதிக அளவில் உள்ளனர்.அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க, நகராட்சி சார்பில் ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால், அதையும் மீறி சில வணிக நிறுவனங்கள், தொடர்ந்து ஒரு முறை உபயோகம் செய்து துாக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகளை அதிகமாக பயன்படுத்தி வருவதாக, நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.அதன் அடிப்படையில், நேற்று நகராட்சி கமிஷனர் தாமோதரன், சுகாதார அலுவலர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். நேற்று மட்டும், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அனைவருக்கும் ரசீது வழங்கப்பட்டது.இது குறித்து நகராட்சி கமிஷனர் தாமோதரன் கூறியதாவது:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியை, பிளாஸ்டிக் இல்லாத துாய்மை நகராட்சியாக உயர்த்த, நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.நேற்று, கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் சோதனை செய்யப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் தொழில் உரிமம் குறித்தும் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.இன்றும், நாளையும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும், தொழில் உரிமம் பெறாதவர்கள் அல்லது ஏற்கனவே பெற்று அதை புதுப்பிக்காதவர்கள் நகராட்சி அலுவலகம் வந்து, நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ஆவணங்களை வழங்கி பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ