| ADDED : ஆக 04, 2024 12:41 AM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே கீழச்சேரி ஊராட்சியில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, அங்கன்வாடி மையம் அருகே, 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.பராமரிப்பு இல்லாமல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள தொட்டியை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, பழைய நீர்த்தேக்க தொட்டிக்கு அருகே, ஜே.ஜே.எம்., திட்டத்தின் சேமிப்பு நிதியில் இருந்து, 16.75 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது,தற்போது, கட்டுமான பணிகள் முடிந்து, குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என, ஊராட்சி நிர்வாகம்தெரிவித்துள்ளது.