| ADDED : ஆக 20, 2024 05:35 AM
செங்கல்பட்டு : செய்யூர் தாலுகா, சோத்துப்பாக்கம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என, தனி மயானம் வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு ராட்டினம்கிணறு பகுதியில் இருந்து, கலெக்டர் அலுவலகம் வரை பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தலைவர் வேலுார் இப்ராஹிம் தலைமையில் ஊர்வலமாக சென்று, கலெக்டரிடம் மனு அளிக்க பா.ஜ.,வினர் திட்டமிட்டு இருந்தனர்.நேற்று நண்பகல் பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார், இப்ராஹிம் உள்ளிட்டோரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, கலெக்டரிடம் மனு அளிப்பதற்கு மட்டும் அனுமதித்தனர்.இதையடுத்து, கலெக்டரை சந்தித்த இஸ்லாமியர்கள் மற்றும் பா.ஜ.,வினர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த இப்ராஹிம் பேசியதாவது:தமிழகத்தில், மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. மனித உணர்வுகளை போலீசார் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு மயானம் கேட்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.