உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

சென்னை : சென்னை, சேத்துப்பட்டை சேர்ந்தவர் ராஜ்குமார், 39. இவர், இரண்டு தினங்களுக்கு முன், தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ், அணுகு சாலையில் காரில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் போலீஸ்காரர் ரிஸ்வான் சென்று விசாரித்தார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ரிஸ்வான் தாக்கியதில் ராஜ்குமார் வலிப்பு ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரித்த போலீசார் ரிஸ்வானை கைது செய்தனர்.வழக்கை விசாரித்த பூந்தமல்லி மாஜிஸ்திரேட், ரிஸ்வானை ஜாமினில் விடுதலை செய்தார். இந்த நிலையில், மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலர் ரிஸ்வானை, 'சஸ்பெண்ட்' செய்து, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ