உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புகார் பதிய ரூ.2,000 லஞ்சம் கேட்ட பூந்தமல்லி பெண் இன்ஸ்., மாற்றம்

புகார் பதிய ரூ.2,000 லஞ்சம் கேட்ட பூந்தமல்லி பெண் இன்ஸ்., மாற்றம்

பூந்தமல்லி:சென்னை புறநகர், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா, 30. இவர், குடும்ப பிரச்னை காரணமாக, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கணவர் மீது சமீபத்தில் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் இந்திராணி, சி.எஸ்.ஆர்., எனும் சமூக பதிவேடு பதிய 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்; அந்த தொகையை, 'ஜிபே' செயலி வாயிலாக அனுப்பும்படி கூறியுள்ளார்.திவ்யாவிடம் மொபைல் போனில் இன்ஸ்பெக்டர் இந்திராணி பேசிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் நேற்று பரவியது.இதையடுத்து, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், இந்திராணியை நேரில் அழைத்து விசாரித்தார். இதில், லஞ்சம் கேட்டது உறுதியானதை அடுத்து, இந்திராணியை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி கமிஷனர் உத்தரவிட்டார். பூந்தமல்லி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில், கர்ப்பிணியாக இருந்த நான்கு பெண் போலீசாருடன் சேர்ந்து, வழக்கு விசாரணைக்கு வந்த 15 வயது சிறுமிக்கு, இன்ஸ்பெக்டர் இந்திராணி கடந்த வாரம் வளைகாப்பு நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த பெண்ணிடம் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Santi
ஜூன் 23, 2024 22:47

நடவடிக்கை - எது நடவடிக்கை? கைதுசெய்ய வேண்டும், அது தான் நடவடிக்கை. Transfer எல்லாம் ஒரு நடவடிக்கை னு சொல்ல உங்களுக்கு வாய் மற்றும் மானம் கூசாமல் இருக்குனா, எப்பேர்ப்பட்ட டிபார்ட்மெண்ட் அது?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை