| ADDED : ஜூன் 07, 2024 12:35 AM
செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகில் சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில், தினமும் கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.தவிர, தினமும் நுாற்றுக்கணக்கான கல்குவாரி கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், பள்ளி எதிரே பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளதால், அதிக பாரம்ஏற்றிச்செல்லும் கனரகவாகனங்கள் சாய்ந்த நிலையில் செல்கின்றன.இதனால், வாகன ஓட்டி கள் அச்சமடைந்துஉள்ளனர். இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு, சாலையில் இரண்டு அடி ஆழம் வரை பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் வாகனங்கள் சாய்ந்த நிலையில் இயக்கப்படுவதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள்அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதில் உருவாகும் புழுதி, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. எனவே, பள்ளங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.