உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரம் மின் தடை

செங்கை ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரம் மின் தடை

செங்கல்பட்டு:சென்னை புறநகரில் பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றாக செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது. இங்கு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்கின்றன.இந்த நிலையில், நேற்று மாலை 6:30 மணியளவில் ரயில் நிலையத்தில் பயணியர் ஓய்வு எடுக்கும் அறையில் இருந்த சுவிட்ச் போர்ட்டில் பழுது ஏற்பட்டதையடுத்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.இதனால், ரயில் நிலையம் கும்மிருட்டாக மாறி, பயணியர் கடும் அவதிப்பட்டனர். பலரும் மொபைல் போன் வெளிச்சத்தை பயன்படுத்தி சென்றனர். இரண்டு மணி நேரத்திற்கு பின் மீண்டும் மின் இணைப்பு சரிசெய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை