உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், இலவச பேருந்து பயண அட்டை, கண் கண்ணாடிகள், ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்கக்கோரி, 50 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, நலத்திட்டங்களை வழங்குவது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் பரிந்துரை செய்தனர்.அதன்பின், கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு, இலவச பயண அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைக் கலெக்டர் அருண்ராஜ் நேற்றுவழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ